தீபாவளி பண்டிகை நாட்களில் பணியாற்றிய நெகிழ்ச்சி மதுரை மாநகர் போலீசார் மதுரை மாநகர் போலீசார் எல்லா குடும்பங்களும் மனம் மகிழ்ந்து பட்டாசு புத்தாடை விருந்து என அனுபவித்து தீபாவளி கொண்டாடும் வேளையில் கடமையென வந்தால் அத்தகைய கொண்டாட்டங்களை ஒதுக்கிவைத்து பணியாற்றுவோர் உள்ளனர். ஆனால் போலீசர்க்கு நல்ல நாள் பண்டிகை நாள் என்றெல்லாம் கிடையாது. எப்போதும் மக்கள் சேவையில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இந்த பணியை விரும்பி ஏற்றதால் விழாக்காலங்களில் பணிபுரிவதும் மகிழ்ச்சி.
Day: November 13, 2023
மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது
மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது மதுரைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நகரின் அடையாளத்தையே மாற்றியுள்ளது.நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை ஒரே […]
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார்.
பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்.
பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல். மதுரைதீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு […]
பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.மதுரை அரசு ராஜாஜி […]