போலீஸ் ஏட்டு தற்கொலை முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி 42, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார். நேற்று பணியில் இருந்தபோது நண்பரிடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு சென்று வருவதாக கூறினார். பின் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூர்த்தி உடலை போலீசார் கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
Day: November 14, 2023
மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல்
மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பு […]
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு […]
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க நீதிமன்றம் புதிய கால அவகாசம் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது இருப்பிடம் இந்த கால அவகாசத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக விருதுநகர் மாவட்டத்தில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர் இதில் விருதுநகரில் 11 வழக்குகள் சிவகாசியில் மூன்று வழக்குகளும் அருப்புக்கோட்டையில் 6 வழக்குகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எட்டு வழக்குகளும் திருச்சுழியில் […]
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், ஆவரம்பட்டி அருகே அழகுத்தேவன் குளத்தைச் சோ்ந்த குருசாமி ராஜா மகன் சிவக்குமாா் (43). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தாா். இந்த நிலையில், சிவக்குமாா் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி ( 23 ) மகன் குருசரன் ( 4) ஆகிய மூன்று பேரும் தெற்கு வெங்கநல்லூா் ஊராட்சி இ. எஸ். ஐ. குடியிருப்பு அருகேயுள்ள […]