சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளுக்கு நாள் வாகனத்தின் தேவையும்,அதன் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன, இதனால் எங்கும்,எதிலும் வாகனமயமாகிக்கொண்டிருக்கிறது,இதனால் கண்மூடித்தனமான வேகம் கை,கால்,உயிரிழப்பும் ஏற்படுகிறது, இந்த பேராபத்திலிருந்து பொதுமக்களை காக்கவேண்டும் என்று தமிழக அரசால் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் முன்னிலையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு குறித்து அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து,திரு.ஆனந்த் ஆகியோர் […]
Month: January 2020
ரவுடிகளின் வலையில் சிறுவர்கள் சிக்காமல் இருக்க காவல்துறை மூலம் ‘பாய்ஸ் கிளப்’ தொடங்க நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. தகவல்
காஞ்சிபுரத்தில் காவல் துறை மூலம் பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட பள்ளிப் படிப்பை நிறுத்தும் சிறுவர்கள், பள்ளி செல்லா சிறுவர்களை ரவுடிகள் சிலர் தங்கள் குழுக்களில் இணைத்துக்கொள்கின்றனர். இதனைத் தடுக்க பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு மூலம் அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து […]
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்கள் எனமொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பணியாற்றினர்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்கள் எனமொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பணியாற்றினர். 17.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடினர். அப்போது எவ்வித அசம்பாவிதமும் நிகழா […]
சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை.
சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை. தஞ்சாவூர் நகர்ப் பகுதியான கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழைமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று அதிகாலை பின்புறம் உள்ள கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள், கோயிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரம் கொண்ட ஜினவாணி என அழைக்கப்படுகிற சரஸ்வதி, […]
அனிமேஷன் வடிவில் திருக்குறள்: குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க புதிய திட்டம்
திருக்குறளைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க அனிமேஷன் வடிவில் உருவாக்கப் புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக திருநாவுக்கரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வரும் 43-வது புத்தகக் கண்காட்சியில் காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள்’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே திருநாவுக்கரசு ஐபிஎஸ் பேசும்போது, ”அறத்தைப் போதிக்கும் திருக்குறளை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். திருக்குறள் […]
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இளைஞர்களை ஒன்று சேர்த்து தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டம்: 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒன்று சேர்த்து, தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தனித்தனி […]
வேலூர் கோட்டை பூங்காவில் கத்தி முனையில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை- காவல் துறையினரிடம் சிக்கிய 2 பேரிடம் விசாரணை
வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் இரவு நேரத்தில் காதலன் முன்னிலையில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர், வேலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரும் பணியாற்றி வருகிறார். இவர்கள், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து […]
பொங்கல், காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடு: சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு
பொங்கல் பண்டிகையின்போது சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதேபோல், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள சர்வீஸ் சாலை நுழைவாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் […]
குடியரசு தின விழாவை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் காரணமாக பார்வையாளர்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா குடியரசாகி 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள விமான […]
கேட்பாரற்று கிடந்த 17 பவுன் தங்க நகைகளை போலீஸில் ஒப்படைத்த பெண்: காவல் துறையினர் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 17 பவுன் தங்க நகைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (ஜன.19) 17 பவுன் தங்க நகைகள், 500 ரூபாயுடன் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அவ்வழியே சென்ற திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் என்பவர் எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் நகைகளை திருமயம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் […]