ஒத்திகையே இப்படி..! அசரவைக்கும் தமிழக காவல்துறை..! (படங்கள்) ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. சென்னை, மெரினா அருகிலுள்ள காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகையில் காவல்துறையின் குதிரை படை அணிவகுப்பு, போக்குவரத்து காவல்துறையின் அணிவகுப்பு, காவல்துறையின் பெண்கள் பிரிவின் அணிவகுப்பு,என பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகைப் […]
Month: January 2020
சிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை!
சிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை! கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சிறப்புவாய்ந்த கோவில்களில் தில்லை அம்மன் கோவிலும் ஒன்று. நடராஜர் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தில்லையம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள். இதனால் இந்த கோயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் சிறப்பாக இருக்கும். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் […]
தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!
தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது! கிருஷ்ணகிரி அருகே, தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த வேன் ஓட்டுநரை பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). வேன் ஓட்டுநர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். […]
கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்.
கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம். வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நிலையில், கண்காணிக்க தவறியதாக, இரு எஸ்.எஸ்.ஐ., இரு ஏட்டுகள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.சேலம், கன்னங்குறிச்சியில், கடந்த, 14, 15ல், ஏரிக்கரை சாலை, ராமநாதபுரம் கிழக்கு தெரு பகுதிகளில், வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம், மடிக்கணினி ஆகியவை கொள்ளைபோனது. இதுகுறித்து, நேற்று வரை, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஐந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, வாகன தணிக்கை, குற்றவாளிகளை கண்காணிப்பதில் தொய்வு […]
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது.
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது. ஆரோவில் அருகே சப் இன்ஸ்பெக்டரை திட்டி, தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேற்று பொம்மையார்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் வாகன தணிக்கை செய்தார். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை திட்டி, தாக்க முயன்றார். உடன், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பசுபதி என்கிற பச்சையப்பன், 26; […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று காவலர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும், […]
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர், கடந்த 10ம் தேதி சென்னையில் 4 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார். அவரை பிந்தொடர்ந்த மர்மநபர்கள் 4 பேர் டெல்லி போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி, பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி, பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி புது-தாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் உள்ள கோகுலம் மனநலம் பாதித்தோர் இல்லத்தில், பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் பழனி நகர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார். பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சையத் பாபு, சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி மற்றும் போக்குவரத்து […]
4.250 கி.கி. கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது
4.250 கி.கி. கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது இன்று 17.01.2020-ம் தேதி C3- எஸ்.எஸ். காலனி ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் அவர்கள் மதுரை டவுன், எல்லீஸ் நகர் போடிலைன் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த செந்தில்குமார் (எ) வெள்ளிகண்ணு செந்தில் 39/19 த/பெ. வெள்ளையன், மதுரை தீடீர்நகரை சேர்ந்த இளையராஜா 30/20 த/பெ. பிச்சை மற்றும் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த […]
காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம்
காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 07.01.2020-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் விழாவை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் பின் விளைவுகளையும் எடுத்துக் கூறி பேரணியை துவக்கி […]