வெயிலின் தாக்கம் கருதி போக்குவரத்து காவல்துறையினருக்கு சோலார் தொப்பி – மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் காவலர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி 19.02.2020-ம் தேதியன்று மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலன் கருதி சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
Day: February 21, 2020
நூலகங்களை ஏற்படுத்தித் தரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நூலகங்களை ஏற்படுத்தித் தரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டம் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்காக அரசுப்பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து கொடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 20.02.2020ம் தேதி அவலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் போத்துவாய் தடாகம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசுப்பள்ளிகளில் நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஊர் […]
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை 19.07.2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஏரகாடைச் சேர்ந்த கோபால் என்பவருக்கும் அவரது மனைவி வனிதா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் கோபால் அவரது மனைவி வனிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததையடுத்து இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய குற்ற எண் u/s 302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 21.02.2020-ம் தேதி […]