நண்பன் கொலை வழக்கில் 5000 அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை..! சிவகங்கை வைரவன்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் கடந்த 2013-ம் வருடம் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் விஜயபாண்டியன் ஆகிய 2பேருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆண்டியப்பனை மேற்படி நபர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி, கை மற்றும் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் படுகாயமடைந்த ஆண்டியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆண்டியப்பன் 05.05.13 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை […]
Day: February 18, 2020
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டல் காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டல் காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 18/02/2020 அன்று காலை வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் , ஆயுதப்படை ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையிலான காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்கள். அதன்பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களை Turn-out ஆய்வு செய்தார்கள். மேலும் மாவட்ட நாய் படைப்பிரிவின் மரியாதையை […]
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் யாசர் அராபத் மற்றும் மூன்று நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில். இவ்வழக்கு 17.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் […]
காவலரின் மனிதாபிமானம்..!!
காவலரின் மனிதாபிமானம்..!! புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கு அண்ணாநகர் பகுதியில் காரில் வந்தவர்கள் ஒரு முதியவரை காயத்துடன் இறக்கி சென்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற காவலர் மோகன், பேசமுடியாத நிலையில் இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். அதனை அவர் சாப்பிட முடியாததால் அவரே ஊட்டிவிட்டதுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்பு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.