அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர் 20-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020-ம் தேதி துவங்கி பீகார் மாநிலம்¸ டெஹிரியில் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ருக்மங்கதன் அவர்கள் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
Day: February 15, 2020
S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்.
S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதி ரூபாய் 10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் […]
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று (15.02.2020) சென்னை கண்ணகி நகரில் காவல்துறையுடன் இணைந்து ஸ்ரீ கிளினிக் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போதை தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரியாஸீதின் மற்றும் ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலை ஆய்வாளர் திரு. வீரக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் போதை பொருட்கள் உபயோகத்தின் தீமைகள் குறித்து […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (14.02.2020) குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் […]