Police Department News

கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்

கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நூதன முறையில் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்து 26 நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

Police Department News

கொலையாளிகளை விரட்டி பிடித்த தனிப்படை போலீஸார்.

கொலையாளிகளை விரட்டி பிடித்த தனிப்படை போலீஸார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட அதையூர் கிராமத்தில் சொத்து தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கொலையாளிகளை காவல் கண்காணிப்பாளர் அறிவுரைபடியும் துணை காவல் கண்காணிப்பாளர் உளுந்துர்பேட்டை அவர்கள் தலைமையில் மிக விரைவாக வழக்கின் எதிரிகளை மடக்கி பிடித்த போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கள்ளக்குறிச்சி மாவட்டம் திரு. ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதிகள் அளித்தார்கள்.