கோத்தகிரி அருகே சுருக்கில் சிக்கிய புலி தப்பிய நிலையில், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைத்த நில உரிமையாளர் மீது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்திற்கும் இடையில் உள்ள புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் புலி ஒன்று சுருக்கு வலையில் சிக்கியது. வனத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கும் முன்பு புலி தாமாக […]