Police Department News

கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை

கொள்ளையனை 24 மணிநேரத்தில் பிடித்த காவல்துறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பழக்கடையிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளை போன வழக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர் இ.கா.ப அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடித்து அவரிடமிருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை மீட்டனர். குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாத் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.