நத்தம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா கடத்தப்படுகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து […]
Month: May 2023
வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு
வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு […]
சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்
சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர். இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, […]
விழுப்புரம், கடலூர், கள்ளக்கறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: புதிய டி.ஐ.ஜி பேட்டி
விழுப்புரம், கடலூர், கள்ளக்கறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: புதிய டி.ஐ.ஜி பேட்டி விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் […]
கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் […]
தேனி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
தேனி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார். தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார். நண்பர்களான […]
விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அரசு பள்ளி மைதானத்திற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வந்தார். அப்போது கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியில் ஈடுபட்ட 20-க்கும் […]
சென்னையில்ரூ.1500 பணத்துக்காக கொலை:மது குடிப்பதற்காக மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தேன்- வாலிபர் வாக்குமூலம்
சென்னையில்ரூ.1500 பணத்துக்காக கொலை:மது குடிப்பதற்காக மூதாட்டியை கொன்று கொள்ளையடித்தேன்- வாலிபர் வாக்குமூலம் சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராமன் பிள்ளை தெருவில் கடந்த 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் 108 அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த தகவலின் பெயரில் ஐஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கோவையில் உணவு கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்
கோவையில் உணவு கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம் கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி […]
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்- டிரைவர்கள் 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்- டிரைவர்கள் 2 பேர் கைது தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக காய்கறி, அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு தினமும் கேரளாவுக்கு லாரிகள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் ஒருசிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அங்கிருந்து இறைச்சி கழிவுகள், […]