நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க சிதம்பரம் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம்விழிப்புணர்வு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜாராம் அவர்களின் அறிவுருத்தலின் பேரில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் எடுத்துவரும் போது பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்தும் கோவில் திருவிழாக்கள்மற்றும் விசேட இடங்களுக்கு செல்லும் பெண்கள் தங்களது தங்க நகைகளை பாதுகாப்பாக எப்படி அணிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் […]
Day: May 14, 2023
சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி
சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காரைக்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார். இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.தேவர் சிலை வரை […]
சிவகங்கையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம்
சிவகங்கையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம் புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது36). மினிவேன் டிரைவரான இவர் சம்பவத் தன்று சிவகங்கைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். சிவகங்கை அருகே கீழக்கவனவயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சுப்பிரமணி, ஜெயக்குமார், சோணமுத்து, சொர்ணராஜ், முத்துக்குமார், சுந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர். […]
வீடு புகுந்து பணம்-காமிரா திருட்டு
வீடு புகுந்து பணம்-காமிரா திருட்டு சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நித்யா(வயது42). இவர் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், காமிராவை திருடிக்கொ ண்டு தப்பினார். மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரான்மலை பாப்பாபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் சம்பவத்தன்று அங்குள்ள மங்கைபாகர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து […]
சிவகங்கை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசி. இவரது மகன் கபிலன் (வயது17). இவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆனால் பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கபிலன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் […]
நத்தம் அருகே திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு
நத்தம் அருகே திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு நத்தம் அருகே சிறுகுடி பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு சமையலுக்காக விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில் 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து நத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை வனத்துறையினர் விட்டனர்.
வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]
மதுரையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
மதுரையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 22). பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்த அவர், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளம் மீனாட்சி தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் ஆனந்தகுமாரை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி […]
மதுரை காமராஜர் சாலையில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
மதுரை காமராஜர் சாலையில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (62).சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.