தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் ஹோட்டலில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்தவர் கைது. நல்லம்பள்ளி அருகே தொப்பூரில் உள்ள ஓட்டல்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தொப்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற் கொண்டனர். அப்போது தொப்பூர் பகுதியை சேர்ந்த தன பால் என்பவர் ஓட்டலில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றது தெரியவந்தது. பின்னர் தொப்பூர் போலீசார் தனபாலை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் […]
Day: May 25, 2023
தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்.
தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் அலுவலகம் தர்மபுரியில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் திரு .அண்ணாமலை அவர்கள் பொதுமக்கள் இடையே மனுக்கள் பெற்றார் மற்றும் தர்மபுரியில் உள்ள அனைத்து காவல் உதவி நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ
பாலக்கோட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கியமுன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழாவினை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்,எம்.எல்.ஏ.,குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து ,மாவட்ட சுற்றுச்சூழல் துணை பொறியாளர் லாவண்யா, மருத்துவர்கள் மோகனப்பிரியா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது […]
பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுவதாக தகவல் .
பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுவதாக தகவல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாரண்டஅள்ளி – பஞ்சப்பள்ளி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஆகியவற்றை வரும் மே.29 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வரும் மே.30 […]
பாலக்கோடு வருவாய் கோட்டத்தில் நில அளவீடு சங்கிலிகளை பார்வையிட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நஜீரி இக்பால்
பாலக்கோடு வருவாய் கோட்டத்தில் நில அளவீடு சங்கிலிகளை பார்வையிட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நஜீரி இக்பால் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சிக்கார்தன அள்ளி, பி.செட்டி அள்ளி, கரகதஅள்ளி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கான பசலி1432க்கான தீர்வாயத்தில் வரவு – செலவு கணக்குகள், பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை […]
மகேந்திரமங்கலம் கிராமத்தில் கணவன் சந்தேகப்பட்டதால் காதல் மனைவி கைக்குழந்தையுடன் மாயம்.
மகேந்திரமங்கலம் கிராமத்தில் கணவன் சந்தேகப்பட்டதால் காதல் மனைவி கைக்குழந்தையுடன் மாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது. 24) இவர் அதே பகுதியில் மளிகை கடைநடத்தி வருகிறார்இவர் கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டியை சேர்ந்த சுஜி (வயது.19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 1 வயதில் தர்னிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சுஜி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு […]
தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் நடைபெற்றது.தருமபுரி மாவட்டத்தில் 28 காவல் நிலையங்கள், மாவட்ட குற்றபிரிவு மற்றும் நில அபகரிப்பு பிரிவு என மொத்தம் 30 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இம்முகாமில் 134 மனுக்கள் வந்தது. இதில் 111 […]
ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உறுதி
ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உறுதி செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை […]
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு […]
நம்ம சென்னை’ செயலி மேம்பாட்டு பணி தீவிரம்
நம்ம சென்னை’ செயலி மேம்பாட்டு பணி தீவிரம் சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.செயலியின் பல்வேறு அமைப்புகள் மாநகராட்சி வலைதளத்தில் உள்ளது போல் செயல்படவில்லை.சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு ‘நம்ம சென்னை’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் […]