காவல் நல கவுன்சில் சார்பாக மதுரை தீயணைப்பு வீரருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலராக திரு. மாரிமுத்து அவர்கள் இருந்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காவல் நல கவுன்சிலின்© (டிஜிசிஓ) Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.etPh.d(USA).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் வழி காட்டுதலின்படியும் ஆல் இந்தியா ஜர்னலிஸ் கிளப்பின் மாநில தலைவர் மற்றும் செயலாளர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு அலுவலர் திரு. மாரிமுத்து […]
Day: May 22, 2023
மதுரையில் இ-சேவை மையம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி
மதுரையில் இ-சேவை மையம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் […]
மாயமான லாரி டிரைவர் மர்ம சாவு
மாயமான லாரி டிரைவர் மர்ம சாவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேலூரில் […]
தென்காசியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
தென்காசியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 […]
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த அரசு ஊழியர் கைது தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது […]
நத்தம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
நத்தம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா கடத்தப்படுகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து […]
வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு
வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு […]
சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்
சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர். இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, […]
விழுப்புரம், கடலூர், கள்ளக்கறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: புதிய டி.ஐ.ஜி பேட்டி
விழுப்புரம், கடலூர், கள்ளக்கறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: புதிய டி.ஐ.ஜி பேட்டி விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் […]
கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் […]