காரிமங்கலம் அருகே தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கரகப்பட்டியில் அமைந்துள்ள தலைகொண்ட அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி கணபதி பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை மற்றும் முதல் காலயாக பூஜை யாத்ராதானம்ஆகியவற்றுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை சுவாமி கண் திறப்பு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் 2ம் மற்றும்3ம் கால யாக பூஜை பிம்பசுத்தி ரக்ஷாபந்தனன், நாடிசந்தானம் ஆகியவை நடந்தது.நேற்று காலை 9 […]
Day: May 4, 2023
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை மற்றும் இரு சக்கர வாகன ஆக்கிரமிப்புக்களால் பயணிகள் அவதி .
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை மற்றும் இரு சக்கர வாகன ஆக்கிரமிப்புக்களால் பயணிகள் அவதி . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்க்கு நாள் ஒன்றுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், புறநகர் பேருந்து பகுதி சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.இந்நிலையில் குறுகிய பேருந்து நிலையத்தில் கடைகாரர்கள் பேருந்து […]
காரிமங்கலம், உணவகங்கள் மற்றும் குடிநீர், குளிர்பான நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.
காரிமங்கலம், உணவகங்கள் மற்றும் குடிநீர், குளிர்பான நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு. தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி., ஐ.ஏ.எஸ்., அவர்கள் கடந்த வாரம் குளிர்பானம் , குடிநீர் சுத்திகரிப்பு கேன்கள் மற்றும் பழக்கடை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனை வணிகர்களுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையில் வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் […]
கோவையில் 100 பவுன் நகை-2½ கோடி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
கோவையில் 100 பவுன் நகை-2½ கோடி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது கோவை புலியகுளம் ரோடு கிரீன் பீல்ட் காலனி சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவருக்கு சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி வர்ஷினி ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றார். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு வர்ஷினி ராஜேஸ்வரிக்கு இரவு […]
மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு
மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும்.மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். வருடம் […]
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பார்வையிட்டடார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதுக்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ துரிதமாக செயல்பட்டு அணைக்கப்பட்டது. வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் யானைகள் இறப்பது இயற்கை. இருந்தாலும் இறப்பு குறித்தும், யானைகள் மரணத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் […]
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:- மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் […]
மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி வரsவேற்ற பெண்கள்
மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி வரsவேற்ற பெண்கள் 6-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய […]
லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி திருமங்கலம் அருகே உள்ள மூனாண்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாதேவன் (32). இவர் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரடிக்கல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் கீழஉரப்பனூரை சேர்ந்த வேன் டிரைவர் […]
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது திருமங்கலம் சேடப்பட்டி அருகே உள்ள பெரியகட்டளை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகே சென்றபோது ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அதில் ஒரு மூதாட்டியும், ஒரு வாலிபரும் இருந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது 4கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளையை சேர்ந்த பூமா என்ற […]