தருமபுரி மாவட்டம் 11.05.2023 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல் மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதியில், ஆஞ்சநேயர் கோவில் முன்பு பாலக்கோடில் இருந்து 50 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் பிரதான சாலையில் பேருந்து கவிழ்ந்ததால், ஒகேனக்கல்லுக்கு செல்லும் […]
Day: May 11, 2023
திண்டுக்கல்திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை
திண்டுக்கல்திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமையா மகன் பொன்ராஜ் (47). தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது 17 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி பொன் ரமேஷ் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இதே போல […]
விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற 3 பேர் கைது
விருதுநகரில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைதிகளை கொல்ல முயன்ற 3 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பி, பூண்டு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குணாவின் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று சின்னதம்பியை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் யுவராஜ், விக்னேசுவரன் ஆகிய 2 பேர் […]
பண்ருட்டியில் நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது
பண்ருட்டியில் நகை வாங்குவது போல் நடித்து தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து […]
தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.
தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. சாம்சன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கனிமவளதுறை மூலம் 11ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6.55 கோடி நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை .
கனிமவளதுறை மூலம் 11ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6.55 கோடி நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட பொதுமக்கள் கோரிக்கை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள எர்ரணஹள்ளி, நல்லூர், சூடானூர், ஜெர்த்தலாவ், புலிகரை, கரகதஹள்ளி, பி.கொல்லஹள்ளி, சோமனஹள்ளி, அ.மல்லாபுரம், செல்லியம்பட்டி, உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள நொரம்பு, கல், மண், போன்றவற்றை பொது உபயோகத்திற்கு விற்றது மற்றும் குவாரிகள் டெண்டர் மூலம் பெறப்பட்ட வருவாயில் 75 சதவீதம் சம்மந்தபட்ட […]
பாலக்கோடு அருகே
கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
பாலக்கோடு அருகேகஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). விவசாயி. இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வருவதாக பாலக்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தர்மன் வீட்டுக்கு சென்ற போலீசார் பின்புறம் பார்த்தபோது 1% அடி உயரம் கொண்ட கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தர்மனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் […]
குத்தல அள்ளி கிராமத்தில் கிணறு தூர் வாரும் போது தலையில் கல் விழுந்து கூலி தொழிலாளி பலி .
குத்தல அள்ளி கிராமத்தில் கிணறு தூர் வாரும் போது தலையில் கல் விழுந்து கூலி தொழிலாளி பலி . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கன்னிப் பட்டியை சேர்ந்தவர் கிணறு வெட்டும் தொழிலாளி வடிவேல் (வயது.63) இவர் இன்று காலை பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது கிணற்றின் மேல் இருந்த கல் ஒன்று கிணற்றின் உள்ளே இருந்த வடிவேல் தலையின் மீது விழுந்தது,இதில் […]
தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம்
தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம் தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் உஷாராணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை கண்டறிந்து மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு […]
பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி
கட்டிட மேஸ்திரி சாவு
பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கிகட்டிட மேஸ்திரி சாவு தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சூடனூர்கிராமத்தைசேர்ந் தவர்முனிராஜ்மகன்நவீன் (30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான விவசாயநிலத்தில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திவந்தள்ளது. இதனால் நவீன் விவசாய பயிர்களை சுற்றி மின் வேலிஅமைத்துளளார். இன்று அதிகாலை நிலத்திற்குச் சென்று பயிர்களை பார்வையிட்டார். அப்போது அவர் காட்டுப் பறிக்கு அமைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம்பாய்ந்து நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார்விசாரணைசெய்து வருகின்றனர்.