மாரண்டஅள்ளி கணபதி நகரில் இன்று குடியிருந்த வீட்டை இடிக்க வந்த திமுக பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்.. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்து வருபவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா,இவர் தனது சொந்த நிலத்தில் புதியதாக 4 ஏக்கரில் குடியிப்பு லே அவுட் அமைத்து அதற்கு அங்கீகாரம் பெற பூங்கா அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு ஒரு பகுதி நிலத்தை ஒதுக்கி தந்துள்ளார்,பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தையொட்டி வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.லே-அவுட்டிற்க்கு […]
Day: May 23, 2023
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் 70 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் 70 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு. பாலக்கோடு, மே.24-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் நடைப்பெற்றது.இதில் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட புலிக்கரை பிர்காவிலுள்ள செல்லியம்பட்டி, பி.கொல்லஅள்ளி, செக்கோடி, பூகானஅள்ளி, காட்டனஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, மோது குலஅள்ளிஉள்ளிட்ட கிராமங்களுக்கான பசலி1432க்கான தீர்வாயத்தில் வரவு – செலவு கணக்குகள், பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 70 மனுக்களை மாவட்ட ஆட்சியரின் […]
மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.
மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குபேந்திரன் (வயது.37), இவரது மனைவி ரங்கநாயகி(வயது. 26)இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகிறது 4 வயதில் ஒரு மகன் . உள்ளார்.குபேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தவர்வீட்டிற்க்கு அருகே உள்ள சங்கு என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி […]
ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு
ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக என்.சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் […]
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே […]
திருச்சியில் சாராயகடை சந்து
திருச்சியில் சாராயகடை சந்து கள்ளச்சாராயம் என்ற வார்த்தை தற்போது தமிழகத்தை பரபரப்பாக்கி பேசும் பொருளாக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் மதுபானத்தை கள்ள சந்தையில் வாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் மேலும் பரபரப்பாக்கியது. இது மட்டுமின்றி இந்த விவகாரம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை உள்ளது. இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. […]
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் ஒதுக்கப்படுகிறது
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் ஒதுக்கப்படுகிறது சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை. நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும். சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். […]
மதுரையில் செல்போன்-பணம் திருட்டு
மதுரையில் செல்போன்-பணம் திருட்டு மதுரை மணி நகரம் மணி அய்யர் சந்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜசேகர் (வயது33). இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு வாலிபர் திருட முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி கொண்டமநாயக்கன் பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த் (26) என்பது […]
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை […]