மதுரை அரசு பொருட்காட்சி; அமைச்சர் திறந்து வைத்தார் சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், […]
Month: April 2023
மதுரை விரிவாக்கப் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை விரிவாக்கப் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாதபுரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு […]
மதுரையில் பல்வேறு இடங்களில் 2 பெண்களிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள்
மதுரையில் பல்வேறு இடங்களில் 2 பெண்களிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதியில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். […]
மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர்களது ஆலோசனை பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது தராசுகளை மறுமுத்திரையிடாதது, தரப்படுத்தாத எடை அளவுகள் பயன்படுத்தியது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்காதது, நிறுவன உரிமங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றிற்காக 26 நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது. குளிர்பானங்கள், தண்ணீர் […]
மதுரை விராட்டிபத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
மதுரை விராட்டிபத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது மதுரை விராட்டிபத்து அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.கொத்தனார். இவரின் தம்பி திரவியம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் திரவியம் சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் தெருவில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாலமுருகன் தம்பியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரத்துடன் சென்ற திரவியம் வேல் கம்புடன் வந்து அண்ணன் பாலமுரு கனை சரமாரியாக […]
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாகும். இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு […]
மதுரையில் ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது
மதுரையில் ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு […]
மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைது
மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைது மதுரை கே.புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம் பட்டி முத்துப்பட்டி தெரு முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) ஆகிய 2 பேர் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விளையும் மாம்பழங்கள் தற்போது கடைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. இங்கு சப்போட்டா, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், அல்போன்சா போன்ற ரக மாங்காய்கள் காய்க்கின்றன. செங்கோட்டை மற்றும் சுற்று கிராமங்களில் விளையும் இந்த […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). எலக்ட்ரீசியன். கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி (59). தொழிலாளி. இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஆலங்குளத்தை அடுத்துள்ள முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் […]