தர்மபுரியில்கொரோனாவுக்கு முதியவர் பலி தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த 78 வயது முதியவருக்கு சளி, காய்ச்சல், மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த […]
Day: May 6, 2023
லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் மீது வழக்கு
லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 […]
கோவையில் முன் விரோதத்தில் 2 பேர் மீது தாக்குதல்-வாலிபர் கைது
கோவையில் முன் விரோதத்தில் 2 பேர் மீது தாக்குதல்-வாலிபர் கைது கோவை பேரூர் மெயின் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (48). வியாபாரி. இவர் செல்வபுரம் எல்ஐசி காலனி சிஜிவி நகரில் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று 2 ஊழியர்கள் இவரது ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் தகராறு செய்தார். மேலும் அங்கிருந்த லேப்டாப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். […]
கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை
கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் […]
கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கோவையில் உள்ள 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில அமைப்புகள் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை முன்னிட்டு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி உள்ள 3 வணிக வளாகங்கள் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]
தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் போலீசில் புகார்
தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் போலீசில் புகார் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2017-19, 2018- 2020,2019-2021ம் கல்வியாண்டில் இங்கு ஐடிஐயில் படித்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களின் கல்வியாண்டு முடிந்த பின்னரும் அவர்களுக்கான […]
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோபனா […]
திருச்சியில் ஆற்றுப்பாலத்தின் கீழ் இளைஞர் சடலம் மீட்பு
திருச்சியில் ஆற்றுப்பாலத்தின் கீழ் இளைஞர் சடலம் மீட்பு திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. முகம் முழுவதும் சிதைந்த நிலையில் […]
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறகுவதை காண பல் வேறு இடங்களிலிருந்தும் வந்தவர்கள் கோரிப்பாளையம் தல்லாகுளம் தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கூடியிருந்தனர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அங்கு புகுந்தது அந்த கும்பல் பக்தர்கள் பொதுமக்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்டவைகளை […]
வாசுதேவநல்லூரில் மதுபாட்டிலால் நண்பரை குத்திய வாலிபர்
வாசுதேவநல்லூரில் மதுபாட்டிலால் நண்பரை குத்திய வாலிபர் வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் […]