மதுரையில் சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு விருதுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர். சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் […]
Day: May 16, 2023
ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு
ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குரும்பட நடிகர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குரும்பட நடிகர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு காவல்துறையினருக்கு இடையேயான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று தந்த ஆபத்பாந்தவன் என்ற குரும்படத்தை தயாரித்தளித்த படக்குழுவினரை பாராட்டும் விதத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அந்த படத்தில் பங்கேற்ற கலைஞர்களையும் காவல் துறையினரையும் அழைத்து அவர்களுக்கு சான்றிதழ், கேடயம் கொடுத்து பாராட்டினார்.
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார். பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை […]
மோட்டார் சைக்கிளில் வந்து நகை-பணம் பறிக்கும் கும்பல்
மோட்டார் சைக்கிளில் வந்து நகை-பணம் பறிக்கும் கும்பல் மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது50). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் மறித்து அவரை தாக்கினர். தொடர்ந்து அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொட ர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி […]
மதுரையில் கள் விற்ற மூதாட்டி கைது
மதுரையில் கள் விற்ற மூதாட்டி கைது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே […]
பெல்ரம்பட்டியில் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை .
பெல்ரம்பட்டியில் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (வயது .26) இவரது மனைவி கவி பிரியா இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.குடும்ப பிரச்சனை காரனமாக கனவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் கவிபிரியா கோபித்து கொண்டு நார்த்தம்பட்டியில் உள்ள அம்மா […]
தருமபுரியில் பரபரப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
தருமபுரியில் பரபரப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் காரிமங்கலத்தை சேர்ந்த கஸ்தூரி, அவர் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் 27 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும் விபத்து இழப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி வழங்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.