10 பவுன் தங்க தாலி செயின் பறிப்பு – இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடம் பணத்தை பறித்து செல்லும் குற்றவாளிகள், பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் […]
Day: May 9, 2023
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர்பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்புறுத்தி கொண்டிருப்பதை பார்த்தார். இதனை கண்ட அவர் […]
ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையி லும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கடை களில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் […]
சிவகங்கையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சிவகங்கையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு […]
தென்காசி பழைய பஸ் நிலையத்தில் நின்றவரிடம் செல்போன் திருட்டு-3 வாலிபர்கள் கைது
தென்காசி பழைய பஸ் நிலையத்தில் நின்றவரிடம் செல்போன் திருட்டு-3 வாலிபர்கள் கைது தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார். உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய […]
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி- போலீசார் கைது செய்தனர்
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி- போலீசார் கைது செய்தனர் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறார். தினமும் பணி முடிந்த பிறகு கடையநல்லூரில் இருந்து அவர் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம். அதேபோல் நேற்றிரவு 8 மணிக்கு கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே மாணவி நடந்து சென்றார். அப்போது மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் லாரியில் இருந்து இறங்கிய சேலத்தை சேர்ந்த […]
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி மண்எண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் மறைத்து […]
கோவையில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒத்திகை
கோவையில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒத்திகை கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் […]
கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்
கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம் கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட […]
டீக்கடைகளில் புகை பிடிப்பவர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
டீக்கடைகளில் புகை பிடிப்பவர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இது தொடர்பாக எந்த விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக டீக்கடை களில் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஹாயாக நின்று புகையை ஊதி தள்ளுகின்றனர். இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது […]