காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் இவருக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மூன்றாவது மகள் நதியா (வயது.19), பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து தந்தை மாரண்டஅள்ளி காவல் […]
Day: May 27, 2023
மேல அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு…..
மேல அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு….. மதுரை கீரை துறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.மதுரை கீரை துறை போலீசார் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிந்தாமணி ராஜம்மாள் நகரைச் […]
தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது
தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மற்றும் பாபநாசம், மெலட்டூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி பணம், செல்போன், லேப்டாப், நகைகளை பறித்துச் சென்றதாக அந்தந்த […]
கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார்
கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதுபடி, கோவை மாநகரில் 3 புதிய சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள் என 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. டிஜிபி சைலேந்திரபாபு இக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார். கோவை மாநகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் […]
சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம்
சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம் சென்னை போலீஸ் காவல் ஆணையரகம் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி கமிஷனராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனராகவும், தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி போலீஸ் கமிஷராக (சி.ஐ.டி.) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி கமிஷனராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள […]
மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர். அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித […]
ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் […]
மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் – பணிகள் முடங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் – பணிகள் முடங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் ஆலங்குளம், வி.கே.புதூர், ஊத்துமலை, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கோட்டத்தின் தலைமையிடமான ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் அண்டை கிராமங்களை சேர்ந்த புகார்கள் விசாரி க்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரக்கூடிய நகரமான ஆலங்குளத்தில் தினமும் வரும் புகார்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 7 பவுன் நகை -ரூ.68 ஆயிரத்தை திருடிச் சென்றனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 7 பவுன் நகை -ரூ.68 ஆயிரத்தை திருடிச் சென்றனர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வம்சவிருத்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 35). இவர் கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி […]