விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.2.50 லட்சம் நிதியுதவி அளித்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுக்குலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (32). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 10-ம் தேதி விடுப்பிலிருந்த காவலர் கார்த்திக்பாண்டியும் அவரது நண்பர் ஜெயபாண்டி (34) என்பவரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதி […]