Police Department News

பெசண்ட் நகர் கடற்கரை தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் தனது எட்டு மாத குழந்தையுடன் கடற்கரை ஓர நடைபாதையில் உறங்குகின்றனர்

பெசண்ட் நகர் கடற்கரை தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் தனது எட்டு மாத குழந்தையுடன் கடற்கரை ஓர நடைபாதையில் உறங்குகின்றனர். திடீரென்று தாய் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த கணம் அருகிலிருந்த தன் குழந்தையை காணாததால் பெரும் பதட்டதிற்குள்ளாகிறார். உடனே தன் கணவனை எழுப்பிவிட்டு கடற்கரை அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் தேடுகின்றனர். மனம் வெதும்பி கடைசியில் அரக்கபரக்க அருகிலுள்ள காவல்நிலையத்தில் கண்ணீருடன் ஓடி நடந்த விவரத்தை கூறுகின்றனர். விவரத்தை பெற்ற காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு […]

National Police News

கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடுவால்வு பேருந்து நிறுத்ததில் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. வேலம்மாள்அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது என ஆலோசனை வழங்கி, பெண்கள் தங்கள் […]

Police Department News

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, அதன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை 1909ம் ஆண்டு திரு.பேடன் பவுல் என்பவர் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் சாரண, சாரணியர்களின் நற்பண்புகளை வளர்த்தல், சமூக சேவையாற்றுவது போன்றதாகும். இவர் 22.02.1857 அன்று பிறந்தார். ஆகவே பாரத சாரண, சாரணியர் […]

Police Department News

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிகிறது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்கா பெரு நெருப்பாக மாறி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. ரசாயன பொருள் எரிவதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. அதே நேரம் நுரை கொண்டு அணைக்க முயன்றும் தீ அணையவில்லை. கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ கட்டுக்கடங்கவில்லை. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பக்கத்திலுள்ள ஆவடி பகுதிகளுக்கும் புகை பரவியுள்ளது. பொதுமக்கள் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பிடித்த பகுதிக்கு வேடிக்கைப்பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர். போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி தனது உயர் அதிகாரிகளுடன் தானே நேரடியாக தீயை அணைத்து மீட்ப்புபணியில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “மருந்து தயாரிக்கும் கெமிக்கல் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம் பக்கம் பொதுமக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை. புகை காற்றில் பரவுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தகவல் எதுவுமில்லை. மருந்துப்பொருள் என்பதால் ஆபத்தில்லை என்றே நினைக்கிறேன். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விதமான நுரைகளும் இந்த தீயணைப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மூன்றுப்பக்கமும் சூழ்ந்து அணைத்து வருகிறோம், ஒருபக்கம் மட்டும் செல்ல முடியவில்லை. அங்கும் வீரர்கள் சென்றுள்ளனர். மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லாரிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர், மேலும் 500 தீயணைப்பு அதிகாரிகள் வர உள்ளனர். ஓரிரு மணி நேரத்தில் அணைத்துவிடுவோம். தற்போது அனைத்துவிதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தீயை அணைப்பதாலும், மருந்துப்பொருளின் தன்மையாலும் புகை அதிகமாக வருகிறது. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். தீ பற்றி எரிந்த இடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அகற்றப்பட்டுவிட்டனர். காவல் ஆணையர் உயர் அதிகாரிகள் இங்கு நேரில் பார்வையிட்டு வருகின்றனர்”. இவ்வாறு தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிகிறது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்கா பெரு நெருப்பாக மாறி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. ரசாயன பொருள் […]

Police Department News

எலியட்ஸ் பீச்சில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு : கடத்தல் கும்பல் பிடிபட்ட சுவாரஸ்ய நிகழ்வு: சிசிடிவி கேமராவின் சிறப்பான உதவி

பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் உறங்கிய 8 மாத கைக்குழந்தையை கடத்திய கும்பல் ரூ.2.25 லட்சத்துக்கு விற்றது. குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். ஆரம்பம் முதல் குழந்தையை வாங்கியவர் வீடுவரை 3 வது கண்ணான சிசிடிவி கேமரா உதவியால் சாதிக்க முடிந்தது. காணாமல்போன குழந்தை பதறிய தாய் கடந்த 28- ம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் ஸ்கேட்டிங் மைதானத்தில் கும்பகோணத்தை […]