மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (27.3.2020) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், இ.கா.ப. […]