போலி பீடி தயாரித்தவர் கைது திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார கடைகளுக்கு தங்கள் நிறுவன பெயர்கொண்ட பீடிகளை ஒரு சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கோவை நூர்செட் பீடி மேலாளர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.விசாரணையின் போது ஒரு சில கடைகளில் போலியான நூர்செட் பிடி இருப்பது தெரியவந்தது.பின்னர் அந்த கடைகளுக்கு சப்ளை செய்யும் நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் […]
Day: March 3, 2020
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!!
டிக் டாக்கில் ஆபாச விடியோ வாலிபர் கைது..!! தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (19). தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், டிக் டாக்கில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார், இன்று கண்ணனை கைது செய்தனர்.
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று 2.3.2020. தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38 ஆவது அகில இந்திய அளவிலான குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வென்ற ஒரு சுழல் கோப்பை […]