கடலூர், கடலூர் திருவந்திபுரம் குமாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் பந்தல் வேலை செய்யும் ஆறுமுகம் (வயது 34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆறுமுகம், திருமாணிக்குழி நரிக்குறவர் காலனியை சேர்ந்த மிளகாய்தோட்டம் என்பவரது மகன் சங்கர் என்கிற சுரேஷ் […]
Day: September 23, 2020
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘கேடயம்’ திட்டம் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
திருச்சி, திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆனி விஜயா ‘கேடயம்‘ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளார். சர்வதேச நீதி குழுமம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் […]