பொய்யான வீடியோக்ள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு தமிழக டி.ஜி.பி.,அதிர்ச்சி தகவல் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பரவிய பொய்யான செய்திகள் அவற்றால் ஏற்பட்ட பீதி குழப்பத்தை பக்குவமாக கையாண்டு இயல்பு நிலை திரும்ப உதவிய தொழில் நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்கள். தற்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டது எனினும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது […]