பாலக்கோடு காவாப்பட்டியில் மாட்டு வண்டியில் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் முனியப்பன் (வயது .20), திருமணம் ஆகாதவர், இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்,வேலைக்கு சென்று விட்டு இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்,சித்திரப்பட்டியில் இருந்து காவாப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது காவாப்பட்டி பிரிவு சாலையில் எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த […]
Day: March 24, 2023
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதார இணை இயக்குநர் டாக்டர் .சாந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது..உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.நுரையீரலில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்று காரணமாகவும், பொது இடங்களில் எச்சில் துப்புவதாலும் காசநோய் கிருமிகள் […]
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள்
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குற்றத்தடுப்பு துப்பு துலங்குதல் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் பதுக்கல் விற்பனைக்கெதிரான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்தல் கண்காணித்தல் நீதி மன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதி துறையுடன் இணைந்து செயல்படுதல் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த மற்றும் […]
போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மொட்டலூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 1.25 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன் நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் ஆக்கிரமிப்பு களை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் நேற்று தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய் துறையினர் […]
வடபழனி-கே.கே.நகரில் 2 பேரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு
வடபழனி-கே.கே.நகரில் 2 பேரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு சென்னை, எம்.ஜி.ஆர். நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அசோக் நகரில் உள்ள காலணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கே.கே.நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தனது செல்போன் சார்ஜ் இல்லாததால் ‘சுவிட்ச் ஆப்’ ஆகிவிட்டது அவசரமாக வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என்று […]
மதுரையில் காவல் துறையினரின் கும்ப வாரிசுளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம்
மதுரையில் காவல் துறையினரின் கும்ப வாரிசுளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது. மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை […]
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவர்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவர் மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை […]
ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு வலை வீச்சு
ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு வலை வீச்சு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, குராயூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது32), ராணுவ வீரர். இவரது மனைவி கவுசல்யா(28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யனார் காஷ்மீர் ராணுவ முகாமில் தங்கி பணியாற்றி வருகிறார். கவுசல்யா தனது குழந்தைகளுடன் குராயூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் மாமியார், மாமனார் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 2 மர்ம நபர்கள் […]
பழனியில் ரேசன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது
பழனியில் ரேசன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ்(47). கே.வேலூரில் ரைஸ்மில் வைத்துள்ளார். இந்த ரைஸ்மில்லில் ரேசன் அரிசியை வாங்கி பட்டைதீட்டி விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் இந்த மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை பறிமுதல் செய்தனர். […]
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சில அமைப்புகளை தடை செய்தது. அப்போது கோவையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. மேலும் 2 கடைகளில் டயர் எரிப்பு சம்பவம், 2 அரசு பஸ்கள் மீது கல் வீச்சு உள்ளிட்ட 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 9 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது […]