காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் 3-காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு – பொதுமக்கள்அஞ்சலி தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50) இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஒயர்கள் அமைத்து உள்ளார். இந்த மின் ஒயர்கள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து […]
Day: March 7, 2023
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்து
நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்துநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்க்கு சென்று சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்,விபத்தும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சுகாதாரமாகவும் சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.அதனை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு […]
தென்காசியில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசியில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தென்காசியில் நடைபெற்றது. இதில் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ரஸ்கின் ராஜ் மற்றும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் செந்தூர் பாண்டியன், சங்கர சுப்பிரமணியன் முத்துக்குமார் தாஹிரா பேகம் கவுரி, பூசை துரைச்சி, கிரிஜா கோபால கிருஷ்ணன் ஆகியோர் […]
கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்
கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), உதயமூர்த்தி (38) உள்பட 3 மகன்கள் உள்ளனர். சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று […]
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி- சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி- சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தன் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது […]
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
மோட்டார் சைக்கிள்கள் மோதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் […]
ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலி
ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலி மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர். திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை […]
குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கு
குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். […]