கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு… சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் 999 திருமதி. இந்துமதி விரைவாக செயல்பட்டு மேற்படி சிவாவை விரட்டிப் பிடித்ததற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட […]
Day: March 23, 2023
திருச்சி மாவட்டம் திருவெறுப்பூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு
திருச்சி மாவட்டம் திருவெறுப்பூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் இவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் உள்ள பாம்பு நுழைந்துள்ளது. இதனை பார்த்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நவல்பட்டு முழுவதும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு […]
இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்- தருமபுரி கலெக்டர் தகவல்
இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்- தருமபுரி கலெக்டர் தகவல் தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களுடைய […]
சென்னை லாட்ஜுகளில் அதிரடி வேட்டை: குற்றவாளிகளை அடையாளம் காட்டும் கேமரா மூலமாக 4123 பேரிடம் சோதனை
சென்னை லாட்ஜுகளில் அதிரடி வேட்டை: குற்றவாளிகளை அடையாளம் காட்டும் கேமரா மூலமாக 4123 பேரிடம் சோதனை சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்யவும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். […]
கம்பம் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவருக்கு வலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு
கம்பம் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவருக்கு வலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ் (வயது 32). விவசாயி. இவரது மனைவி அனுமோல் (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 18-ந் தேதி பள்ளியில் இருந்து வந்தவர் மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு பிஜேசும் மாயமானார். […]
கோவையில் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர்
கோவையில் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கோவையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட 2 கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குரங்கு ஸ்ரீராம், கோகுல் ஆகியோர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்ததும் மாநகர போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை தொடர்ச்சியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து […]
சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த வாகைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் எடிசன். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவை சேர்ந்த கவுதமி(வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கவுதமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவரை எடிசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த […]
மேலூர் அருகே பெண் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தம்பதி
மேலூர் அருகே பெண் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தம்பதி மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து […]
பாலக்கோட்டில் விதிமுறை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் .
பாலக்கோட்டில் விதிமுறை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்கின்றனர்.இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்களின் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பஸ் நிலையம், சர்க்கரைஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட […]
பாலக்கோடு காட்டம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பெண் தலைவியை தகாத வார்தைகளால் பேசியதால் தட்டி கேட்ட கணவர் படுகாயம்.
பாலக்கோடு காட்டம்பட்டி கிராமசபை கூட்டத்தில் பெண் தலைவியை தகாத வார்தைகளால் பேசியதால் தட்டி கேட்ட கணவர் படுகாயம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சியில் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.இக் கூட்டத்தில் பாமக வினர் சாலை , வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.நேற்று பெண் தலைவி சங்கோதியை 40 காட்டம்பட்டியை சேர்ந்த பாமக […]