பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என நினைத்து தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி நாகை மாவட்டம் வடபதி அருகே உள்ள சோழம்பேட்டையை சேர்ந்தவர் கிருத்திகா–(வயது26). சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள நாச்சாங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30). இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கோவை பீளமேடு அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. கிருத்திகாவுக்கும், […]
Day: March 13, 2023
மதுரையில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
மதுரையில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் மதுரை கேபிள் டிவி அலுவகத்தில் நடைபெற்றது இதில் தலைமை பொது மேலாளர் (செயலாக்கம்) ஜெயினுல்லாதீன், சென்னை மண்டல துணை மேலாளர் திரு. மாரிமுத்து மதுரை தனி வட்டாச்சியர் திரு. இளமுருகன் தொழில் நுட்ப உதவியாளர் திரு. ராஜன் ஆகியோர்களுடன் மதுரை கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் கலந்து […]
சங்கரன்கோவிலில் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் கனேசன் மகன் வேலுச்சாமி வயது 23இவரது மனைவி துரைச்சி வேலுச்சாமி அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி துரைச்சியிடம் தகராறு செய்து வந்துள்ளார்இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலுச்சாமி மீது சங்கரன் கோவில் டவுன் காவல் நிலையத்திவ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி இனி மேல் பிரச்சனை […]
கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் […]
கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி
கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். […]
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன. புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் […]
மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு
மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு மதுரை மத்திய சிறைச்சாலை மற்றும் திருமங்கலம் உசிலம்பட்டி மேலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவர் சுந்தர் தலைமையில் இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள் பாண்டியராஜா சரண்யா குழந்தைகள் நல குழு உறுப்பினர் சரவணக்குமார் நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார் மற்றும் சட்ட சார்ந்த நன்னடத்தை அலுவலர் குருப்பிரசாத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். கடந்த இரண்டு தினங்களாக நடந்த இந்த ஆய்வில் 18 வயதிற்குட்பட்ட […]