சாட்டிலைட் போனுடன் வாலிபர் சிக்கினார் பாம்பனில் சாட்டிலைட் போனுடன் வாலிபர் பிடிபட்டார். இந்த போன் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. சாதாரண போனுக்கும், சாட்டிலைட் (செயற்கைக்கோள்) போனுக்கும் வித்தியாசம் உள்ளது. சாட்டிலைட் போன் மூலம் ஒருவரது செல்போன் எண்ணுக்கு போன் செய்தால் எந்த ஒரு நம்பரும் செல்போனில் காண்பிக்காது. அதனால் யார் போன் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பொருட்கள், தங்கம், […]
Day: April 5, 2023
கோயம்புத்தூரில்கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
கோயம்புத்தூரில்கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் 32 வயது கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த லோடுமேன் பாலாஜி (வயது 24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர் அடிக்கடி கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும் பாலாஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனது கணவர் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது […]
வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி
வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி மதுரை எஸ்.எஸ். காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது54). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவ னத்தில் அலங்காநல்லூர்-தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள்ஜோதி (43) ஆகியோர் […]
பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்
பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் – ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. […]
திண்டுக்கல்லில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல்லில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(28). ஆட்டோ டிரைவர். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தார்.
கள்ளக்காதல் விவகாரம்- மனைவியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவர் கைது
கள்ளக்காதல் விவகாரம்- மனைவியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவர் கைது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டங்கா குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் ஷரவன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இந்த நிலையில் ஷரவன் தனது மனைவி உஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலிகாரில் வசித்து வந்த உஷாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் உஷாவை ஷரவன் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி […]
கோவை மாநகரில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி முகாம்
கோவை மாநகரில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி முகாம் தமிழகத்தில் பெண் போலீசார் போலீஸ் துறையில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. “சி.ஓ.பி. அவள்” என்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் […]