திரைப்படங்களில்தான் காவல் உயர் அதிகாரிகள் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு செல்வதுபோல் காட்டுவார்கள்.. ஆனால் அதே மாதிரியான உண்மையான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. நள்ளிரவில் சைக்கிளில் சாதாரண உடையில் காவல் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு சென்றுள்ளார். அவரை அங்கிருந்த இரவு நேர பணி காவலர் வழக்கம் போல பணியில் இருந்தார் முகம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார் வந்தது மாவட்ட உயரதிகாரி என காவலருக்கு தெரியாமல்போக நீங்கள் யார்? என்று கேட்ட ருசீகர […]
Day: April 10, 2023
மதுரையில் பொதுமக்களுக்கான போலீஸ் குறை தீர்க்கும் முகாம்
மதுரையில் பொதுமக்களுக்கான போலீஸ் குறை தீர்க்கும் முகாம் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் […]
மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர்
மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு […]
பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர்
பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று மரகதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மரகதத்திடம் வீட்டில் தோஷம் இருப்பதாக […]
திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு
திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல் நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை அமைச்சர் கே.என் நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் இதன் அருகில் சரக்கு வாகனங்களுக்கான முனையும் ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் விற்பனை வளாகம் மாநகராட்சி விளையாட்டு மைதானம் பல்நோக்கு வளாகம் […]
மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார்களா?
மின்வாரிய ஊழியர்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார்களா? மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை மீறுபவர்கள் மீது 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்கள் மீது புகார் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்?- போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்?- போலீசார் தீவிர விசாரணை தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 43 வயதான ஒரு பெண் தனது பெற்றோர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உணவு அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண் தனது வீட்டின் முன்பு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நூதன சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையிலான போலீசார் மோர்பட்டி பிரிவு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நூதன முறையில் டோக்கன் வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை […]