குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க துணை மேயர் நடவடிக்கை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சாலை உள்ளது. இங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு அங்கு போக்குவரத்து சாலை சமன்படுத்தப்பட வில்லை. எனவே அங்கு ரோடுகள் மேடும்- பள்ளமுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த […]
Day: April 3, 2023
தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது
தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது மதுரை பசுமலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் திவ்யா (27). மத்திய அரசு அலுவலகத்தில் தபால் டெலிவரி ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் சைக்கிளில், தபால் பொருட்களுடன் சென்றார். திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. அங்குள்ள போலீஸ் பூத் அருகே, சைக்கிளை நிறுத்தினார். திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் […]
மதுரை திருப்பாலையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை
மதுரை திருப்பாலையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடை பெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அருணா தேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பெற்று […]
தென்காசியில் கல்லூரி மாணவியுடன் பேராசிரியர் ஓட்டம்- போலீசார் விசாரணை
தென்காசியில் கல்லூரி மாணவியுடன் பேராசிரியர் ஓட்டம்- போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் பிரவீன். இவரது மனைவி ராமலெட்சுமி (வயது 35). இவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ஜான் பிரவீன் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். எங்களுக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் உள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கல்லூரியில் 4 நாட்கள் […]
சங்கரன்கோவில் அருகே மனைவியின் காதை கடித்த கணவருக்கு போலீசார் வலைவீச்சு
சங்கரன்கோவில் அருகே மனைவியின் காதை கடித்த கணவருக்கு போலீசார் வலைவீச்சு சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி செல்வி( வயது 24). இவர் தனது மனைவியிடம் அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி செல்வி தனது அம்மாவுடன் ஏழாயிரம்பண்ணையில் 4 மாதமாக வசித்து வந்துள்ளார். அங்கு சென்ற வீரபாண்டி அவரை சமாதானப்படுத்தி ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். உடனே செல்வி தனது அம்மாவுடன் ஓடைக்கரைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு செல்வி […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கண்ணாடிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணி(வயது 51). இவரது மனைவி சந்திரா(40). மணி அப்பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது வலது கை உடைந்தது. இதனால் அவரால் தொழிலை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு மஞ்சள்காமாலையால் அவர் மிகவும் பாதிப்படைந்தார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த […]
திண்டுக்கல் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திண்டுக்கல் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி செம்பட்டி அருகே வீரக்கல் பிரிவு தனியார் தோட்டத்தில் மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் ஒன்று கூடும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை, மதுரை, கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பெங்களூர், கேரளா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவ அலுவலர் பரிந்துரையின்பேரில், வட்டார […]
பழனியில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்
பழனியில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பல் திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் ஹரிஹரன் (வயது 25). இவர் எர்ணாகுளத்திற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தார். நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது மறைந்திருந்த ஒரு கும்பல் ஹரிஹரனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை கொடுத்தார். இது […]
செங்கோட்டை அருகே குண்டாறு அணையில் மூழ்கி வாலிபர் சாவு
செங்கோட்டை அருகே குண்டாறு அணையில் மூழ்கி வாலிபர் சாவு செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சேலம் மாவட்டம் காட்டு வளவு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பிரியாவுடன் அங்கு தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் குண்டாறு அணையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக […]
நீதிமன்ற வளாகத்தில் கைதி செல்போனில் பேசிய விவகாரம்: 2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்டு
நீதிமன்ற வளாகத்தில் கைதி செல்போனில் பேசிய விவகாரம்: 2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்டு மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘வீடு ஒத்திக்கு விடப்படும்’ என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் […]