பணி நிறைவு பாராட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த திரு. சேகர் அவர்களின் பணி நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. வினோத் அவர்கள் கலந்து கொண்டு பணிநிறைவு ஆணையை வழங்கி வாழ்த்தினார்.
Day: April 2, 2023
108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர […]
சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்ஐசி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு- போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு- போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அதிரடி நடவடிக்கை சென்னையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது என்பது காவல் துறையில் கரும் புள்ளியாகவே எப்போதும் இருந்து வருகிறது. சிக்னல்களில் நின்றபடி லாரிகள், சரக்கு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கின்றன. செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பின்னர் பொது மக்களே இது போன்ற வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த […]
மதுரை மேலூரில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணின் நகை-பணம் திருட்டு
மதுரை மேலூரில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணின் நகை-பணம் திருட்டு மேலூர் ஸ்டார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மலர்விழி (42). இவர் சிங்கம்புணரி செல்வதற்காக மேலூர் பஸ் நிலையம் வந்து காத்திருந்தார். இவர் ரூ.8 ஆயிரம், கைச்செயின் ஒரு பவுன் மற்றும் 2 பவுனில் 2 மோதிரங்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஒரு மணி பர்சில் வைத்து அதனை கட்டைப்பையில் வைத்துக் கொண்டு வந்தார். பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பின்பக்கமாக வந்து […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்… திருடன்… என்று சத்தம் போட்டார். […]
திண்டுக்கல்லில் வீடு புகுந்து வியாபாரி வெட்டிக்கொலை- தடுக்க வந்த மகன் படுகாயம்
திண்டுக்கல்லில் வீடு புகுந்து வியாபாரி வெட்டிக்கொலை- தடுக்க வந்த மகன் படுகாயம் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் […]
கஞ்சா வியாபாரிகள் பற்றி 10581, 9498410581 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்- மதுவிலக்கு போலீசார் அறிவிப்பு
தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 426 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 730 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் ஐ.ஜி.ருபேஷ் குமார் […]
லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் […]
பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் நேருயுவ கேந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ லர்களாக செயல்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். சிறுதொழில் பிச்சையெடுப்பில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைஞர் […]