தென்காசி சிவகிரி அருகே புறாக்களை திருடிய வாலிபர் கைது சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை அடுத்த ராமசாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி முருகலெட்சுமி. இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதில் அடைக்கப்பட்டிருந்த 12 புறாக்கள் நேற்று அதிகாலை மாயமானது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக முருகலெட்சுமி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே […]
Month: May 2023
போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி
போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் […]
தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக பீதி: அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக பீதி: அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி விட்டனர். அங்கிருந்து படிப்படியாக முன்னேறிய அரிசி கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது. ஏகலூத்து ரோடு ஆசாரி மார் வீதிகளில் வலம் வந்த அரிசி […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கோவிலை உடைத்து நகை திருட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கோவிலை உடைத்து நகை திருட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட […]
விருத்தாசyலம் அருகே பால்கடை உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்
விருத்தாசyலம் அருகே பால்கடை உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 22) இவர் அதே பகுதியில் பால்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கடைக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். அவர்கள் ராம்குமாரை சரமாரியாக தாக்கி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியா வெட்டினர். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி […]
நிலத்தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
நிலத்தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி (வயது35). இவருக்கும், அஜ்ஜனஅள்ளி பகுதியை சேர்ந்த செல்வராணியின் அக்கா மகன் சூரிய குமாருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சூரியகுமார் அவர் பயன்படுத்திய நிலத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார். இதனை செல்வராணி கணவர் பெருமாள் நிலத்தை கிரயம் செய்த பின்னர் கட்டுமான […]
மதுரை கரும்பாலை பகுதியில் சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
மதுரை கரும்பாலை பகுதியில் சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் விஸ்வா (வயது24). கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் உதயா (30). இவர்கள் கரும்பாலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்தமுயன்றார். இதை தடுக்க முயன்ற விஷ்வாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த […]
மதுரையில் காவலாளி தற்கொலை
மதுரையில் காவலாளி தற்கொலை மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் […]
மதுரையில் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
மதுரையில் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் […]
எடை குறைந்த அழகிய புதிய வடிவில் சிலிண்டர்- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்
எடை குறைந்த அழகிய புதிய வடிவில் சிலிண்டர்- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய ‘காம்போசிட்’ சிலிண்டரை […]