Police Department News

கொலை வழக்கில் தேடப்பட்டவர் போலீசில் பிடிபடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் திரிந்த ரவுடி

கொலை வழக்கில் தேடப்பட்டவர் போலீசில் பிடிபடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் திரிந்த ரவுடி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் தார்ப்பாய் முருகன் கோஷ்டியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கடந்த 1998-ல் மோதல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரமேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ்குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். […]

Police Department News

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள்

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருச்சியில் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள் தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில் 21 முக்கிய சாலை சந்திப்புகளில் கழிப்பறை, குளிர்சாதன அறை, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் அதிநவீன போக்குவரத்து காவல் மையங்கள் (மாடர்ன் டிராபிக் பூத்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சியில் முக்கிய சாலை சந்திப்புகளில் பணிபுரியும் போக்கு வரத்து காவலர்கள் இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும். மழையின்போது ஒதுங்கவும் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதையறிந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தனியார் […]

Police Department News

பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு

பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு பாலக்கோடு அருகே உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான் கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் வேப்பில அள்ளி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு 10 பேர் மான் கறி சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தர்மபுரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மான் கறி வாங்கி வந்து சமைத்ததாக தெரிவித்தனர். இதையடுதது […]

Police Department News

மதுரை சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீசார்க்கு மாநகர காவல் ஆணையர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்

மதுரை சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீசார்க்கு மாநகர காவல் ஆணையர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் மதுரை மாநகர் காவல் துறை சார்பில் உலகப்புகழ் சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலிசார்க்கு பாராட்டு விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் காவல் ஆணையர் தலைமை தாங்கினார். மற்றும் இணை துணை ஆணையர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் திருக்கோயில் ஆணயர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Police Department News

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பள்ளி மாணவி பலி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பள்ளி மாணவி பலி கடத்தூர் அடுத்து வேப்பிலைப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகள் சுபா இவர் அவரது தோட்டத்தில் ராகி கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவல் அறிந்து வந்த கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.