வரதட்சணை கொடுமையால்இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரூர் அருகே உள்ள மருக்காலம்பட்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து […]
Month: June 2023
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 15 ஆம் தேதி அன்று இவர் நல்லம்பள்ளியில், சேலம்-தருமபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபாஞ்சி சிகிச்சை பெற்று […]
கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை- கலெக்டர் சாந்தி எச்சரிக்கை தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் வனத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் […]
கட்டிடமேஸ்திரி தற்கொலை
கட்டிடமேஸ்திரி தற்கொலை தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் உச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது35). கட்டிடமேஸ்திரி. இவருக்கு கடன் பிரச்சினையால் தவித்து வந்தார். இதனால் அவரது குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக மனவேதனையில் இருந்த தேவேந்திரன் சம்பவத்தன்று விஷமருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி கொண்டு வந்தனர். அப்போது அவர் வரும்வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் […]
பாலக்கோடு பைபாஸ் சாலையில் கர்நாடகாவிலிருந்து மோட்டார் சைக்கிளிலில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் கைது .
மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் .
பாலக்கோடு பைபாஸ் சாலையில் கர்நாடகாவிலிருந்து மோட்டார் சைக்கிளிலில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் கைது .மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் பாலக்கோடு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இராயக்கோட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு பை மூட்டையுடன் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்,சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளகர்நாடக மாநில மதுபாட்டில்கள் 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரனையில் பெண்ணாகரம் அருகே மோட்டுப் பட்டி […]
பாலக்கோடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்க்கு தடை
மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு .
பாலக்கோடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்க்கு தடைமீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சியும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமை வகித்தார். இதில் மாசு காட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்திய லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.தமிழக முழுவதும் 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த […]
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தல் காரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி, உத்தரவின்பேரில் ரேசன் அரிசி கடத்தலை […]
பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் குளித்த சிறுவன் உயிர் இழப்பு
பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் குளித்த சிறுவன் உயிர் இழப்பு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி ராஜேஸ்வரி தம்பதியர் அவர்களது மகன் கவியரசன் வயது 10 மாக்கனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயல்வெளியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டார் உடன் சென்ற சிறுவர்கள் பதற்றத்துடன் விரைந்து வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர் […]
கடமடை அருகே பைக் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி.
கடமடை அருகே பைக் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியசாமி (வயது.55)இவர் இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டிலிருந்து கிருஷ்ணன் கொட்டாய் நோக்கி தர்மபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்,கடமடை அருகே சென்றவர் திடிரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார்,அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது,இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே […]
பாலக்கோடு கடைத்தெருவில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் .
பாலக்கோடு கடைத்தெருவில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (வயது.64), இவர் இன்று காலை பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்,பி.டி.ஓ.அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது,இதில் முதியவர் தலையில் பலத்த காயம் […]