பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
Month: June 2023
சிவகங்கை மாவட்டம் முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு
சிவகங்கை மாவட்டம் முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, […]
போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் […]
ஓட்டலில் பணம் பறித்த கும்பல்
ஓட்டலில் பணம் பறித்த கும்பல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் […]
வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு […]
புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் […]
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மூதாட்டியிடம் செயின் பறிப்பு மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது67). இவர் அதே பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வண்டியூர் சி.எஸ்.ஆர். தெரு […]
குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது
குடோனில் இரும்பு பொருட்களை திருடி எடைக்கு போட்டவர் கைது வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் இரும்பு பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் திருவள்ளூரை சேர்ந்த பத்மநாபன் (வயது 55) என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் தொழிற்சா லைக்கு பயன்படுத்தும் இரும்பு டிஸ்க் பொருட்களை வைத்திருந்தார். அந்த குடோனுக்கு மேலாளர் கணேசன் ஆய்வு செய்தபோது, இரும்பு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரமாகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசில் புகார் […]
போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு
போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் நிலையம் சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பேரணியில் போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்,போதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஊயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதையால் வாழ்க்கை சீரழிவு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியும், போதை […]
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் […]