வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.40 லட்சம் மோசடி செய்த பெண்களுக்கு வலை கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து போடி ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுமங்கலி, தங்கராஜ் மனைவி சித்ரலேகா ஆகியோரை சந்தித்தார். இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். […]
Day: July 4, 2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை […]
பாலக்கோடு அருகே ஆடு முட்டியதில் மூதாட்டி சாவு
பாலக்கோடு அருகே ஆடு முட்டியதில் மூதாட்டி சாவு பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நஞ்சப்பன். இவருடைய மனைவி மங்கம்மாள் (வயது.65) இவர் நேற்று காலை தான் வளர்க்கும் வெள்ளாட்டு கிடாவை வேறு இடத்தில் கட்டுவதற்காக ஆட்டின் கயிற்றை அவிழ்க்க சென்றார். அப்போது ஆடு மூதாட்டியின் வயிற்று மீது பலமாக முட்டியது. இதில் கீழே விழுந்த மங்கம்மாளின் பின்பக்க மண்டையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. உடனடி யாக குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் […]
கடலூர்பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி- துவரம் பருப்பு கடத்திய 2 பேர் கைது:மினி லாரி- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கடலூர்பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி- துவரம் பருப்பு கடத்திய 2 பேர் கைது:மினி லாரி- மோட்டார் சைக்கிள் பறிமுதல் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி […]
சிதம்பரம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த கணவன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சிதம்பரம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த கணவன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிலம்பரசன் (வயது 35). துபாயில் பணி செய்து திரும்பியவர். இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் அரசூரை சேர்ந்த கந்தசாமி மகள் ரோஜாவிற்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி திருமணமானது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வந்தது. இந்நிலையில் நேற்று சிலம்பரசனுக்கும், ரோஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர்(வயது59). ரியல் எஸ்டேட் தரகரான இவர் கடந்த 29-ந்தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு வேலையை முடித்த சிவசங்கர் இரவு ஊருக்கு புறப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கீழே விழுந்த சிவசங்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே […]
ஆபத்தான “பைக்” ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்
ஆபத்தான “பைக்” ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் […]
மதுரையில் டாக்டர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்த கார் டிரைவர்
மதுரையில் டாக்டர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்த கார் டிரைவர் மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெயராமன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நாராயணன் வயது மூப்பு காரணமாக வீட்டில் ஜெயராமனை அனைத்து பகுதிகளிலும் அவர் மீதான நம்பிக்கையின் பேரில் அனுமதித்ததுடன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் பார்க்கும் பணியிலும் ஈடுபடுத்தினார். இந்த நிலையில் நாராயணனின் […]
பணியின்போது செல்போனுக்குத் தடை – காவல் ஆணையர் அதிரடி
பணியின்போது செல்போனுக்குத் தடை – காவல் ஆணையர் அதிரடி சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது […]
எழும்பூர் மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
எழும்பூர் மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் ராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கம்போல் பணிக்கு வந்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.