மதுரையில் பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் […]
Day: July 22, 2023
மதுரையில் இளம்பெண்கள் மாயம்
மதுரையில் இளம்பெண்கள் மாயம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் அச்சின் (வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் குறித்து அவரது தாய் ரேவதி உசிலம்பட்டி டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். […]
மதுரையருகே அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம்
மதுரையருகே அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம் மதுரை மாவட்டம் மேலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சாலையின் இரு புறமும் […]
மதுரையருகே விபத்தில் டிரைவர்-வாலிபர் பலி
மதுரையருகே விபத்தில் டிரைவர்-வாலிபர் பலி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச் சாமி (வயது63), டிரைவர். இவர் சரக்கு வேனில் நிலக்கோட்டையில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வந்தபோது வேனை நான்கு வழிச்சாலையின் சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு எதிர்புறம் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் […]
வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு
வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் […]
தென்காசியில் டிரைவரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
தென்காசியில் டிரைவரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 53). இவர் அங்குள்ள பட்டாசு கடையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தென்காசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 18-ந் தேதி வந்தபோது தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான […]
பென்னாகரம் அருகே பெண்ணிடம் தவறாக முயன்ற டிரைவர் கைது
பென்னாகரம் அருகே பெண்ணிடம் தவறாக முயன்ற டிரைவர் கைது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா (வயது29) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார். வீட்டில் ரஞ்சிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரஞ்சிதா வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜின் மகன் சந்தோஷ் […]
மாரண்டஅள்ளி ஈ,பி, காலணியில் விவசாயி வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் திருடிய நபர் கைது.
மாரண்டஅள்ளி ஈ,பி, காலணியில் விவசாயி வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் திருடிய நபர் கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ,பி. காலணியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது .70) விவசாயி இவரது மனைவி இலட்சுமி, இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.கடந்த 12ம் தேதி வங்கியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தவர் அதனை வீட்டில் உள்ள இரும்பு பெட்டியில் வைத்து விட்டு வீட்டின் கதவை சாத்திவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலந்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.வேலை […]
பாப்பாரப்பட்டியில், தார்சாலையை அகற்ற எதிர்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்
பாப்பாரப்பட்டியில், தார்சாலையை அகற்ற எதிர்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல் பாப்பாரப்பட்டி சின்ன ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் கட்டிட இடிபாடுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டியும், ஆக்கிரமித்தும், ஆகாயத்தாமரை வளர்ந்தும் இருந்தது. இதனை தூர்வாரி ஏரியை மேம்படுத்தி கரையை பலப்படுத்திட ரூ.2.23 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரி வழியாக செல்லும் தார்சாலை ஏரி மேம்பாட்டு பணிக்காக தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை […]