Police Department News

5 கிலோ தங்கம் கொள்ளை விவகாரம்; கார் மீட்பு

5 கிலோ தங்கம் கொள்ளை விவகாரம்; கார் மீட்பு  கோவை ராஜ வீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகைக் கடைக்குத் தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளைப் பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் இருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று […]

Police Department News

பாப்பாரப்பட்டி வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்கு
ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச்சென்ற பகீர் கொள்ளை சம்பவம்…

பாப்பாரப்பட்டி வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்குஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச்சென்ற பகீர் கொள்ளை சம்பவம்… கைவரிசை காட்டியது சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி மைதலியா…? சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு அதிரடி விசாரணையில் இறங்கியிருக்கிறது… காவல்துறை.. தருமபுரி அருகேவுள்ள  பாப்பாரப்பட்டியில் குடியிருந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியரான சிவசேகர் என்பவருடைய வீட்டில்   இந்த கொள்ளை சம்பவம் சத்தமின்றி நடந்திருக்கிறது.. ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணையில் […]

Police Department News

பாலக்கோடு அருகே நல்லூர் கிராமத்தில் கேபிள் ஒயர் சரி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி .

பாலக்கோடு அருகே நல்லூர் கிராமத்தில் கேபிள் ஒயர் சரி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரகுபதி (வயது 50) இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரிடம் கூலி வேலை செய்து வருகிறார்,இன்று மாலை நல்லூர் கிராமத்தில் வேப்பமரத்தில் சிக்கி கேபிள் ஒயர் அறுந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அதனை சரிசெய்ய ரகுபதி நல்லூர் சென்று வேப்ப மரத்தில் ஏறி […]

Police Department News

ஏரி பஞ்சப்பள்ளியில் குட்கா விற்ற பெண் கைது .

குட்கா விற்றவர் கைது . ஏரி பஞ்சப்பள்ளியில் குட்கா விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,பஞ்சப்பள்ளி போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஏரி பஞ்சப்பள்ளி கிராமத்தில் லட்சுமி (வயது. 55) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை கைது செய்த பஞ்சப்பள்ளி போலீசார் அவரிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்தனர்.

Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கர் அதிரடி இடமாற்றம் .
டிஜஜி உத்தரவு .

தர்மபுரி மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கர் அதிரடி இடமாற்றம் .டிஜஜி உத்தரவு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு , காரிமங்கலம், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுரேஷ் ஓகேனக்கல் இன்ஸ்பெக்டராகவும்,ஒகேனக்கல்லில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் பாலக்கோடு இன்ஸ்பெக்டராகவும், அதே போன்று காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மேச்சேரி காவல் நிலையத்திற்க்கும்,பாகலுர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் காரிமங்கலம் காவல் நிலையத்த்திற்க்கும் […]

Police Department News

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 44 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், ஒலக்கூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மயிலத்திற்கும், அவலூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோட்டக்குப்பத்திற்கும், கோட்டக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன் ஒலக்கூருக்கும், கிளியனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தாஸ் திருவெண்ணெய்நல்லூருக்கும், மணிவண்ணன் கண்டமங்கலத்திற்கும், ஆரோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அரகண்டநல்லூருக்கும், இவர்கள் உள்பட மொத்தம் 44 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு […]

Police Department News

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது மதுரை அருகே உள்ள கீழக்குயில்குடி சீனிவாசா காலனி கார்மேக நகர் பகுதியில் சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திண்டுக்கல்- விருதுநகர் நான்குவழி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு கடை திறப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு தினங் களுக்கு முன்பு கடையை திறந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Police Department News

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து மதுரைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்க சார்பில் வக்கீல் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதி சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் […]

Police Department News

தென்காசியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தென்காசியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தென்காசியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் […]

Police Department News

16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று 8 மாத கர்ப்பிணியாக மாற்றிய லாரி டிரைவர்

16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று 8 மாத கர்ப்பிணியாக மாற்றிய லாரி டிரைவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு […]