தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறித்த பெண் ஆலங்குளம்:புளியங்குடியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் கல்லிடைக்குறிச்சி செல்வ தற்காக ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்துள்ளார்.அங்கிருந்து அம்பாச முத்திரம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் […]
Day: September 28, 2023
சாலையில் அலைந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரி.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாட்டின் உரிமையாளர்கள்
சாலையில் அலைந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரி.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாட்டின் உரிமையாளர்கள் திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன் பிடித்து கோணக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சியின் பட்டியில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி பொன்னகர் பகுதியில் மாடுகளை பிடித்தபோது ஒப்பந்ததாரருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒப்பந்ததாரர் பிடித்துச் செல்லும் மாடுகள் […]
பள்ளியில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சந்தை மைதானம் எதிரில் திருப்பத்தூர் வாணியம்பாடி நோக்கி செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 3 பேர் பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று கண்காணிப்பு கேமராக்களை உடைத்து உள்ளனர். இந்த பள்ளியின் அருகே உள்ள குடியிருப்பின் […]
பேரிடர் மீட்புப் பணி செயல்விளக்கம்
பேரிடர் மீட்புப் பணி செயல்விளக்கம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். இதில் தீ பேரிடர் காலங்களில் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் […]
முன்னாள் ராணுவீரர் குடும்பத்துடன் தற்கொலை: டிரேடிங் கம்பெனியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்தாரா?
முன்னாள் ராணுவீரர் குடும்பத்துடன் தற்கொலை: டிரேடிங் கம்பெனியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்தாரா? மதுரை கே.புதூர் அருகேயுள்ள சர்வேயர் காலனி ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி விஷாலினி (36) என்ற மனைவியும், ரமிசா ஜாஸ்பெல் (12) என்ற மகளும் இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு திடீர் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி, மகளுக்கு விஷம் […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்-வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்-வாலிபர் பலி மேலூர் அருகே கீழவளவை அடுத்துள்ள உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா என்ற சோனை காளை(வயது23). நேற்று இரவு தனது நண்பர்கள் நாகராஜ், முத்துக்குமார் ஆகியோருடன் கீழவளவில் இருந்து உடன்பட்டிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரைக்குடியில் இருந்து முத்துக்குமார் என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழவளவு போலீஸ் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 4 […]
அமைச்சர் பெயரைக் கூறி சென்னையில் பலே மோசடி – அதிரடி காட்டிய போலீஸ்
அமைச்சர் பெயரைக் கூறி சென்னையில் பலே மோசடி – அதிரடி காட்டிய போலீஸ் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு இவரது நண்பர் மூலம் லயோலா ரோஜாரியா சர்ச்சில் என்பவர் அறிமுகம் ஆனார். அமைச்சர் மா.சுப்ரமணியன் தமது தந்தைக்கு நெருக்கமானவர் என்றும் பிரேம்குமாருக்கு VAO வேலையும், அவரது சகோதரிக்கு மருத்துவமனை மேற்பார்வையாளர் வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. புழல் […]
5 கிலோ தங்கம் கொள்ளை விவகாரம்; கார் மீட்பு
5 கிலோ தங்கம் கொள்ளை விவகாரம்; கார் மீட்பு கோவை ராஜ வீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகைக் கடைக்குத் தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளைப் பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் இருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று […]
பாப்பாரப்பட்டி வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்கு
ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச்சென்ற பகீர் கொள்ளை சம்பவம்…
பாப்பாரப்பட்டி வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்குஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச்சென்ற பகீர் கொள்ளை சம்பவம்… கைவரிசை காட்டியது சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி மைதலியா…? சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு அதிரடி விசாரணையில் இறங்கியிருக்கிறது… காவல்துறை.. தருமபுரி அருகேவுள்ள பாப்பாரப்பட்டியில் குடியிருந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியரான சிவசேகர் என்பவருடைய வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் சத்தமின்றி நடந்திருக்கிறது.. ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணையில் […]
பாலக்கோடு அருகே நல்லூர் கிராமத்தில் கேபிள் ஒயர் சரி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி .
பாலக்கோடு அருகே நல்லூர் கிராமத்தில் கேபிள் ஒயர் சரி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரகுபதி (வயது 50) இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரிடம் கூலி வேலை செய்து வருகிறார்,இன்று மாலை நல்லூர் கிராமத்தில் வேப்பமரத்தில் சிக்கி கேபிள் ஒயர் அறுந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அதனை சரிசெய்ய ரகுபதி நல்லூர் சென்று வேப்ப மரத்தில் ஏறி […]