போலீஸ் உதவி மையம் திறப்பு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே போலீஸ் உதவி மையத்தை மதுரை காவல் ஆணையர் திரு.லோகநாதன் அவர்கள் திறந்து வைத்தார் துணை ஆணையர்கள் பிரதீப் குமார் மங்களேஸ்வரன் உதவி ஆணையர் குருசாமி ஆய்வாளர் திரு. லிங்கப்பாண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் குற்றங்களை தடுக்க ரத வீதிகள் கிரிவல பாதையில் 60 கண்காணிப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Day: September 24, 2023
ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை
ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: இன்றைய நவீன காலத்தில் வாழ்வின் ஒரு அங்கமாக இணையதளம் உள்ளது. இதனால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அந்தவகையில், ஆன்லைனில் எளிதான […]
நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்; எங்களுக்கு சக்தி இல்லை என கருதாதீர்கள்” – நீதிபதி கருத்து
நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்; எங்களுக்கு சக்தி இல்லை என கருதாதீர்கள்” – நீதிபதி கருத்து மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 01.04.2014 முதல் 31.01.2017 வரை செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகையை தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியார்களுக்கு வழங்க வேண்டும், ஆனால் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை […]
வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை இழுத்து சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வேன் படிக்கட்டில் தொங்கிய பெண் போலீசை இழுத்து சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் ஜீவா (வயது 34). நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம்- வீராணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெண் போலீஸ் ஜீவா, அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருப்போரூர் நோக்கி சென்றது. இந்த […]
மதுரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் நாகமலை புதுக்கோட்டை அருகே தாராப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து ஒலிபெருக்கிகளை சேதப்படுத்தியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறி நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை கண்டித்து தாராப்பட்டி பொதுமக்கள் நேற்று காலை 9 மணியளவில் திடீரென மதுரை-மேலக்கால் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு வந்த சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் கொடிமங்கலம் ஊராட்சி மன்ற […]
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை. கடலூர் மாவட்டம்வடலூர் அருகே உள்ள வெங்கட்டம் குப்பத்தை சேர்ந்த முரளிநாயுடு மகன் வெங்கடேஷ் (29) என்ஜினீயர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். பின்னர், 17-ந்தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது […]
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506)
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506) குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது […]
காவல் துறையில் உளவுப்பிரிவுக்கு தகவல் சொல்லுதல்
காவல் துறையில் உளவுப்பிரிவுக்கு தகவல் சொல்லுதல் இந்த உளவுப் பிரிவு என்பது எல்லோரும் நினைப்பதை போல் அரசியல்வாதிகளை வருமான வரி செலுத்தாத நபர்களை சினிமா நட்சத்திரங்களை மற்றும் சமுதாய விரோதிகளை கண்காணிக்க மட்டும்தான் என்பதில்லை இந்த பிரிவு அதிகாரிகள் தக்க உடுப்பு அதாவது யூனிபார்ம் அணிய வேண்டியதில்லை இவர்கள் ஒவ்வொரு பகுதிவாரியாக நியமிக்கப்பட்டு காவல்துறையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் இவர்களின் முக்கிய பணிகளில் ஒன்று காவல் நிலையத்திற்கு யார் யார் வருகிறார்கள் அங்கு என்ன நடக்கிறது […]
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் புர்கா அணிந்து கொண்டு டான்ஸ்.. வேலூர் இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் புர்கா அணிந்து கொண்டு டான்ஸ்.. வேலூர் இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு நடமாடியது சர்ச்சையான நிலையில், இதில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் எப்போதும் விநாயகரைத் தான் முழு முதற்கடவுளாக வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த வாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நாளில் பொதுமக்கள் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தனர் ஒவ்வொரு […]
காரிமங்கலம் அருகே அடுத்தடுத்த இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை-தொடர் கொள்ளை சம்பவத்தால் தினறும் போலீசார்
காரிமங்கலம் அருகே அடுத்தடுத்த இரண்டு கோயில்கள் மற்றும் அரசு பள்ளி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை-தொடர் கொள்ளை சம்பவத்தால் தினறும் போலீசார் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை பூஜைகள் முடிந்தது வழக்கம்போல் கோயில் அர்ச்சகர் கோயில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.இன்று காலை சென்று பார்த்த போது கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் […]