பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள மாதையன் (வயது .56) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Day: September 2, 2023
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது – 8120 ரூபாய் பணம் பறிமுதல் .
பாலக்கோடு பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது – 8120 ரூபாய் பணம் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சிக்கார்தனஅள்ளி பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த இருவரை கைது […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கடையில் லாட்டரி விற்றவர் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கடையில் லாட்டரி விற்றவர் கைது தென்காசி:பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதா? என பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை […]
பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை சகோதரர்கள்
பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை சகோதரர்கள் மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துராஜா (30), அங்கு குமார் (32) ஆகிய இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே இருவருக்கும் திருமணமாகிய நிலையில் அங்கு குமார் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தின் லக்கேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.தம்பி முத்துராஜா பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். […]
மூதாட்டி-வாலிபர் தற்கொலை
மூதாட்டி-வாலிபர் தற்கொலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது80). இவருடைய பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மூதாட்டி மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் திருப்பதிகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் […]
மதுரை மேலூர் அருகே கபடி வீரர் வெட்டிக்கொலை
மதுரை மேலூர் அருகே கபடி வீரர் வெட்டிக்கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரங்கான்பட்டியை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.இதில் மூத்த மகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் வௌிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு […]
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர் அண்ணாநகர்,பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அடையாறு, தியாகராயநகர் ஆகிய 12 இடங்களில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அண்ணா நகர், நடுவாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் […]
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு கால்நடைகளை சிறைபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கால்நடைகள் சுற்றி திரிகின்றன. கால்நடைகள் கண்டபடி சாலைகளில் இருப்பதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.முக்கிய நெடுஞ்சாலைகளிலேயே சில நேரங்களில் கால்நடைகள் படுத்துக் கொள்கின்றன. அவை நகர்ந்து […]
தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் – தமிழ்நாடு அரசு
தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் – தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, […]