அனுபவமற்ற ஜூனியரை அனுப்பலாமா? – வக்கீலுக்கு ரூ.2,000 அபராதம் விதித்த நீதிபதிகள் புதுடெல்லிசுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.ஆனால் […]
Day: September 16, 2023
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியை அரியலூர் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தாலுகா, கண்டமங்கலம் அருகே குமிளங்காட்டு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). இவரது மனைவியின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, விழபள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (42) மற்றும் அவரது மனைவி மதியழகி (35). சம்பவத்தன்று பிரகாசும் அவரது மனைவி மதியழகியும் பிரபாகரன் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் பிரபாகரனுக்கு பி.எஸ்.என்.எல். […]
தனியார் நிறுவன அதிகாரி தவறவிட்ட ரூ.94 லட்சத்தை திருடிய வங்கி ஊழியர்
தனியார் நிறுவன அதிகாரி தவறவிட்ட ரூ.94 லட்சத்தை திருடிய வங்கி ஊழியர் பெங்களூரு ஐ.டி.ஐ. லே-அவுட், 3-வது பிளாக் மஞ்சுநாத் நகரில் வசித்து வருபவர் பிரமோத். தனியார் நிறுவன அதிகாரி. இவர், புதிதாக ஒரு நிலம் வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் கொடுக்க ரூ.94 லட்சத்தை பிரமோத் வைத்திருந்தார். அந்த பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் கொடுக்கும் முன்பாக கடந்த 6-ந் தேதி சந்திரா லே-அவுட்டில் உள்ள தன்னுடைய நண்பரின் கடைக்கு பிரமோத் சென்றிருந்தார். அங்கு […]
அரசு அலுவலங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது
அரசு அலுவலங்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது பொதுவாக குற்றத்தொடர்பான புகார்களை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டுமென்று நினைபீர்கள் உண்மை அதுவல்ல காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகார் கொடுக்க வேண்டுமென்று எந்த சட்டமும் விதியும் சொல்லவில்லை. காவல் நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கெழுதினாலும் சட்டப்பிரிவு போட்டு எழுத வேண்டும் அப்போதுதான் நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்பதை சட்ட விளக்கத்தோடு புரிந்து கொண்டு மனுவை பெறுபவர்களும் அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பிரிவை குறிப்பிட்டு எழுதுவது. […]
பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!
பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!! மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் காலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை உரக்க வாசித்து, அதன்படி நடப்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. “அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளுக்குப் பின்னால் உள்ள லட்சியங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த இந்த வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று கர்நாடக மாநில சமூகநலத்துறை அமைச்சர் சி. மகாதேவப்பா […]
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு! சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் […]
கைது செய்வதற்கல்லாத புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்தால் நடைமுறை என்ன?
கைது செய்வதற்கல்லாத புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்தால் நடைமுறை என்ன? புகார் கைது செய்வதற்கல்லாதது எனில் காவல்நிலையத்தில் கு.வி.மு.வி. 155 -இன்படி புகாரை பெற்றுக்கொண்டு புகார் கொடுத்தவரை நீதி மன்றத்திற்கு செல்லுங்கள் என காவல்துறை அறிவுரை கூற வேண்டும் என அந்த விதியிலேயே சொல்கிறது. ஆனால் இது நடைமுறையில் போலீசாராலே விசாரிக்கப்பட்டு இனி மேல் இது போல் நடந்து கொள்ள மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டு வழக்கை முடித்து விடுவர். இதுவரை எனக்கு தெரிந்து இது […]
பாலக்கோடு எம்.ஜி ரோட்டில் உள்ள மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இரு தரப்பிணருக்கும் இடையே மோதல் .
பாலக்கோடு எம்.ஜி ரோட்டில் உள்ள மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இரு தரப்பிணருக்கும் இடையே மோதல் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் நேற்று மதியம் உடல் நிலை குறைவால் உயிரிழந்தார்,இவரது உடலை இன்று மதியம் அடக்கம் செய்வதற்காக அதே பகுதியில் உழவர் சந்தை முன்பு உள்ள மயானத்திற்க்கு உறவினர்கள் சவ குழிதோண்ட சென்றனர்.அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் இந்த வழியாக எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்ய வேண்டி […]
பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி DSP தலைமையில் போலீசார் அமைதி ஊர்வலம்.
பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி DSP தலைமையில் போலீசார் அமைதி ஊர்வலம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வருகிற 18 ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை போலீசாரின் அமைதி ஊர்வலம் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் நடைப்பெற்றது.இந்த ஊர்வலத்தில் பாலக்கோடு துணை காவல் கோட்டத்திற்க்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஆகிய 6 […]
மிட்டாநூலஅள்ளி அருகே
கோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி.
மிட்டாநூலஅள்ளி அருகேகோழி பிடிக்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி. நல்லம்பள்ளி,செப்.17: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சின்னநூல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் கோவிந்தன் (எ)கண்ணுபையன்(70).விவசாயி. இவர் வளர்த்து வந்த கோழி ஒன்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் நேற்று இரவு தவறி விழுந்துள்ளது.அதனை மீட்பதற்காக முதியவர் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு […]