Police Recruitment

மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் ஒரே நாளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது செய்யப்பட்டனர். அதிரடி சோதனைமதுரை நகர் பகுதிகளில் உள்ள கல்வி நிலைய வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, கஞ்சா, புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸ் நிலையம் வாரியாக, தனிப்படை அமைக்கப்பட்டு, […]

Police Recruitment

மருத்துவர்கள், நடுத்தர சம்பளம் வாங்குவோரை குறிவைத்து நூதன முறையில் ‘தற்கொலை’ மோசடி மூலம் பணம் பறிப்பு: சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

மருத்துவர்கள், நடுத்தர சம்பளம் வாங்குவோரை குறிவைத்து நூதன முறையில் ‘தற்கொலை’ மோசடி மூலம் பணம் பறிப்பு: சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை  மருத்துவர்கள் மற்றும் நடுத்தர சம்பளம் வாங்குவோரைக் குறி வைத்து, நூதன முறையில் `தற்கொலை’ மோசடி மூலம் கும்பல் ஒன்று பணம் பறிக்க முயன்று வருவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல தரப்பிலிருந்தும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் மோசடிக்காரர்கள் […]

Police Recruitment

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சமயபுரம்:மண்ணச்சநல்லூர் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தேவராஜ் (வயது 23). இவருக்கும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கீழக்கருங்காடு பகுதியை சேர்ந்த சிவனேசனின் மகள் நந்தகுமாரி(23) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]

Police Recruitment

திருச்சி காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

திருச்சி காதல் ஜோடி போலீசில் தஞ்சம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த குமரேசன் (24). திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி(23). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து சிறுகனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய […]

Police Recruitment

செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் திடீர் ஆய்வு

செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் திடீர் ஆய்வு செங்குன்றத்தில் காலை, மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்குன்றத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அனைத்து பொருட்களையும் வாங்க செங்குன்றத்துக்கு வரவேண்டியது உள்ளது. மேலும் ஆந்திராவிலிருந்து செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகமாக வருகின்றன. ஆட்டோக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு […]

Police Recruitment

தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவியை கேலி, கிண்டல் வாலிபர் கைது.

தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவியை கேலி, கிண்டல் வாலிபர் கைது. தர்மபுரி மாவட்டம் தண்டுகாரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.தினமும் மாணவி காலையில் பள்ளிக்கு செல்லும் போதும் மீண்டும் மாலை வீடு திரும்பும் போதும்அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (வயது.30) என்ற வாலிபர்பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.நேற்று முன்தினம் மாணவியின் தந்தை நடராஜனிடம் […]