தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை! தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் இதை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. அதில் மத்திய, மாநில அரசுகள் இதைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.கடந்தாண்டே இந்த மனுக்கள் மீதான வழக்குகள் […]
Day: September 12, 2023
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா். திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் அங்குராஜ். அவருடைய மகள் சுபாஷினி (வயது 21). விஜயமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சுராஜ் மகன் யஸ்வந்த்ராஜ் (22). இவரும், சுபாஷினியும் காங்கேயத்தில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தனர். இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது […]
வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு […]
ஒரு குற்றம் எப்போது உருவாகிறது?
ஒரு குற்றம் எப்போது உருவாகிறது? குற்றம் எப்போது உருவாகிறது என்பது குற்றவியலை பொறுத்த அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒரு குற்றச் செயல் நடந்து முடிந்தால்தான் அது குற்றம் என எண்ணினால் அது தவறு இந்திய தண்டனை சட்டம் 1860 , பிரிவு 34 ன்படி ஒரு குற்ற செயலை மேற்கொள்ள நினைத்தாலே அந்த செயல் குற்றமாகி விடும். முயற்சி செய்த அந்த செயல் நடக்காமல் தோல்வியில் முடிந்தாலும் கூட குற்றம்தான். உதாரணமாக திருடலாம் என நினைத்து […]
சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், “பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அறிவுசார் […]
மதுரை வில்லாபுரம் பகுதியில் ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு..
மதுரை வில்லாபுரம் பகுதியில் ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் அவனியாபுரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீரைத்துறை பகுதி யைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் ரத்தின குமார் (வயது 23) என்பவர் சாப்பிட வந்தார். சாப்பிட்ட பின்னர் அதற்கு பணம் தராமல் ஓட்டலில் […]
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர் மதுரை:பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா […]