மதுரையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. மதுரையில் விளக்கு தூண் பகுதியிலிருந்து சுமார் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் சிறப்புரையாற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வினாயகர் சிலை வைகையாற்றில் கரைப்பு நிகழ்வு போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது
Day: September 22, 2023
பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்
பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள் மதுரைதமிழகத்தில் நகர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நகரில் மாடுகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் மாடுகள் சாலையில் சர்வ சாதரணமாக சுற்றி திரிகின்றன.மேலும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றன.மதுரையில் பெரியார் பஸ் நிலையம், […]
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. சோழவந்தான்சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு […]
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் பரபரப்பு, அதிகாரிகள் விசாரணை மனிதக்கழிவா? விலங்குகளின் கழிவா? என அதிகாரிகள் ஆய்வு. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் கணேசன் […]